11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்..!
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ரஜினிகாந்தை மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி உத்தரவை அடுத்து மருத்துவர் ரஜினிகாந்தை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். கடந்த 14ஆம் தேதி பள்ளி மாணவிக்கு பிரபல மருத்துவ ரஜினிகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அவரது தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தலைமறைவாக இருந்த பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விசாரணை செய்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி அறிவுறுத்தினார்.






