ஆன்லைன் மோசடியில் 80 லட்சத்தை இழந்த டாக்டர்..!
சேலத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரின் செல்ஃபோனுக்கு டிரேடிங் செய்தால் லாபம் கிடைக்கும் என whatsapp மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனையடுத்து அவர் பதினைந்து தவணைகளில் போலியான இணையதளங்கள் மூலம் 80 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் லாபம் பெற்றுள்ளார். இந்நிலையில் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியாத நிலையில் டாக்டர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போது இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.






