--- --:--:-- --

மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் கேப்பிட்டல் எழுத்தில் இருக்க வேண்டும்.. மருத்துவர்களுக்கு உத்தரவு..!

9

நோயாளிகளுக்கான மருந்துகள் குறித்த பரிந்துரை கடிதத்தில் மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் எழுதும் பரிந்துரை கடிதத்தில் நோயாளிகளுக்கு புரியும் வகையில் தெளிவாகவும் கேப்பிட்டல் எழுத்தில் இருக்க வேண்டும் என மத்தியரசு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அனைவரும் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் படி மருத்துவம் மற்றும் ஊடக நல பணிகள் இயக்கம் சார்பில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon