--- --:--:-- --

கொரோனாவால் இறந்தவரின் உடல் பேக்கிங் செய்யப்படும் முறை தெரியுமா?

4

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் எவ்வாறு பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்படுகிறது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது? உடல் முழுவதும் கவச உடைகளால் மறைத்திருக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு உடல் கொண்டுவரப்படுகிறது. அதன் மீது முதலில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

 

பின்னர் உடலிலுள்ள மூக்கு உள்ளிட்ட துவாரங்கள் பஞ்சு கொண்டு அடைக்கப்படுகின்றன. தொடர்ந்து பெரிய பாலிதீன் பையில் உடலை போட்டு முழுவதுமாக மூடி விடுகின்றன. மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சிகள் அச்சத்தையும், கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.

 

உற்றார், உறவினர் முன்னிலையில் பல்வேறு சடங்குகள் செய்த பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப் படுவது வழக்கம். கொரொனா இவை அனைத்தையும் உடைத்து போட்டு உள்ளது என்பதை அவ்வப்போது வரும் இதுபோன்ற காட்சிகள் உணர்த்துகின்றன.

Leave a Reply

Right Menu Icon