மின் கட்டண கவுண்டர்களுக்கு வர வேண்டாம்..! ஆன்லைன் செயலியை பயன்படுத்துக!
கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தாழ்வழுத்த மின் இணைப்பு கொண்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மார்ச்-ஏப்ரல் மாதக் கட்டணத்தை முந்தைய மாதக் கணக்கீட்டின்படி செலுத்த வேண்டுமென தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் ஊரடங்கு உத்தரவால் மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் முந்தைய மாதக் கணக்கீட்டின்படி கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பயனாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமென்ட் முதலிய ஆன்லைன் செயலிகள் மூலம் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் பணம் செலுத்தும் மின் கட்டணம் கவுண்டர்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







