சோனியா காந்திக்கு திமுக எம்பிக்கள் பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி திமுக எம்பிக்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சோனியாகாந்தி இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் டுவிட்டரிலும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, எம்பிக்கள் கனிமொழி, ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். மேலும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்பி பாரிவேந்தரும் சோனியா காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.





