மக்களவையில் பா.ஜ.க மீது கனிமொழி எம்.பி. தாக்கு ..!
மத்திய அரசு செயல்படுத்திவரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாக, புதிய பெயரில் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க எம்பி கனிமொழி இது குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ‘விக்க்சித் பாரத் – ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்)’ சுருக்கமாக விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G) என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி கனிமொழி எழுப்பிய முக்கியக் கேள்விகள்.
மசோதாக்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மட்டுமே ஏன் பெயரிடப்படுகிறது? தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? தேர்தல் வரும்போது மட்டும்தான் உங்களுக்கு தமிழ்நாடு ஞாபகம் வரும். தமிழ்நாட்டிற்கு வந்து, நான் இங்கு பிறக்கவில்லையே என வருத்தப்படுவீர்கள். பீகாருக்குச் சென்று தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய் பரப்புவீர்கள். மத்திய அரசு கூறுவது போல இது ‘வளர்ச்சி பாரதம்’ (Viksit Bharat) அல்ல, இது ஒரு ‘விரக்தி பாரத்’ மசோதா என்று அவர் சாடினார்.
மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற வன்மத்திலேயே மத்திய அரசு இதனைச் செய்வதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தையும் அறிவித்துள்ளது. காந்தி மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பெயர் மாற்றம் செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் வரும்போது மட்டும்தான் உங்களுக்கு தமிழ்நாடு ஞாபகம் வரும். தமிழ்நாட்டிற்கு வந்து, நான் இங்கு பிறக்கவில்லையே என வருத்தப்படுவீர்கள். பீகாருக்குச் சென்று தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய் பரப்புவீர்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.





