--- --:--:-- --

பெண் காவலரிடம் அத்துமீறிய திமுகவினர்.. கைது செய்ய உத்தரவிட்ட தலைமை..!

5

சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர்கள் இரண்டு பேர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

கடந்த 31ஆம் தேதி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண் காவலரிடம் அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் வெளியானது.

 

இதனைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் பிரவினும் ஏகாம்பரமும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்

 

Right Menu Icon