--- --:--:-- --

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்?

4

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

98 வயதான அன்பழகன் கடந்த 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

இதனிடையே மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என தெரிவித்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் எனவே வாழ்த்து தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என அறிக்கையொன்றில் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon