முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம்.. கோவையில் பரபரப்பு..!
கோவையில் முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பினார்.
முதலமைச்சர் இன்று காலை கலைஞர் நூலக விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டார். சென்னை திரும்பி முதலமைச்சர் திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் என பலரும் விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.
விமான நிலையப் பகுதியில் சாலைகளில் இரு புறங்களில் இருந்த பொதுமக்களுக்கு முதல்வருக்கும் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சரை வழி அனுப்ப வந்த கோவை தெற்கு தொகுதி திமுக பொது குழு உறுப்பினர் கதிர் என்பவர் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட திமுக தொண்டர்கள் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





