மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தனது தலைமையில் மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரொனா பாதிப்பிற்கு பிறகு ஏற்கனவே இரண்டு முறை காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் அளித்துள்ளார்.
ஒன்றிணைவோம் வா மூலமாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் அவர் கேட்டறிவார் என தெரிகிறது. கொரொனா பாதிப்பால் திமுக எம்எல்ஏ அன்பழகனின் மறைவைத் தொடர்ந்து கூடுதல் கவனத்துடன், பாதுகாப்புடனும் களப்பணியாற்ற மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.







