சிவகங்கை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கூட்டுபட்டா போடுவதைக் கண்டித்து,திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் கூட்டு சேர்ந்து பட்டா போட்டதை கண்டித்தும், அதை ரத்து செய்ய கோரியும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் பேரூராட்சிக்கு சொந்தமான மட்ட ஊரணியில் புதிதாக ஒரு தெப்பகுளம் கட்டி வருகின்றனர்.
இதற்கு முறையான டெண்டர் எதுவும் அறிவிக்காமல் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், தமிழக அரசின் கதர் மற்றும் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் அடிக்கல் நாட்டு வைத்து துவங்கி வைத்தார்கள்.

இந்த தப்ப குளத்தில் நடுவில் மண்டபம் அமைத்து நான்கு பக்கமும் சுவர் அமைத்து நான்கு மூலைகளிலும் சாமி சிலை வைத்து மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் வேளையில் இதில் மார்க்கண்டேய தீர்த்தம் என்ற பெயரில் டிரஸ்ட் அமைத்து அதற்கு 11 பேர் நியமனம் செய்து திருப்புவனம் சார்பதிவாளர் பதிவகத்தில் பதிவு செய்து உள்ளனர்.
முறையான டெண்டர் விடாமல் கட்டிவரும் தெப்பக் குளத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சியினர் பல போராட்டங்கள் நடத்தி வரும் வேளையில் தற்போது 11 பேர் கொண்ட குழு, பராமரிப்பு பணி என்ற போர்வையில் பத்திரத்தில் பதிந்துள்ளதால் இதனை வன்மையாக கண்டித்து,
திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையிலும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,
வலது கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சி, இந்திய முஸ்லிம் லீக்,
வர்த்தக சங்கம், மற்றும் பல அமைப்புகள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட 11 பேரையும் மாவட்ட ஆட்சியர் உடனே தலையிட்டு 420 வழக்கில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கோஷமிட்டனர்.






