--- --:--:-- --

இந்தியா கூட்டணியில் திமுக – தவெக.. கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் ஏன் அமையக்கூடாது

02

நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு சென்று சாமி கும்பிடவில்லை என்றும், கருத்தியல் ரீதியாக பேசும் தனது தலைமைத்துவத்தை சிதைக்க சிலர் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்கள் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள்நாதன் தலைமையில் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

 

 

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த முகாம், நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர், இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “சனாதனத்தை பேசும் திருமாவளவன் கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு எடுத்து செல்கிறார் என கேட்கிறார்கள் அவர்களுக்கு அது தெரியாது.

 

 

திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள். தேர்தலில் ஜெயித்தவர்கள் தோற்றவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்டதை பற்றி ஏன் யாரும் விவாதம் நடத்தவில்லை. ஆனால் திருமாவளவன் திமுகவுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள்.

 

திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை அதைவிட அதிமுக கண் முன்னரே சிதைத்து விடுகிறார்கள் என்பது ஒரு கவலை. அதைவிட திராவிட கட்சிகளை ஒதுக்கி விட வேண்டும் என பெரியார் காலத்திலிருந்து ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் பிஜேபி மீது எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் கருத்தியல் என்பது வேறு. சான்றுபடி இன்று எனக்கு பிறந்தநாள். ஆகையால் காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இருவரும் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

அதிமுக காலத்தில் இருந்து ஒரு கட்சியில் இருந்து மறு கட்சி பேசுவது வழக்கம் கொள்வது என்பது கிடையாது. அந்த மரபை உடைத்தவன் தான் திருமாவளவன். திமுகவுக்கும், தவெகவுக்கும் ஒரே எதிரி பாஜக தான். கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரஸும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது?” என்று நிர்வாகிகளிடையே திருமாவளவன் பேசினார்.

Leave a Reply

Right Menu Icon