--- --:--:-- --

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக..!

2

2026 சட்டப்பேரவை தேர்தலில் திடீர் திருப்பமாக, தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணயில் இடம்பெற்றிருந்த தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயாந்த், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக அறிவித்தார்.
தொடரந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் “நீங்கள் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

 

எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை இரு கட்சிகளின் சார்பில் அமைக்கப்படும் குழுவினர் பேசி முடிவெடுப்பார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.

கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுகவுடன் முதல் முறையாக கூட்டணியை வைத்துள்ளோம். இதனால் இந்த கூட்டணி மிகவும் வலிமையடைந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்” என்றார். அதிமுகவிடம் கூட்டணி பேசியதாக கூறப்பட்ட தகவலை மறுத்தார்.

Right Menu Icon