இராமநாதபுரம் மாவட்டத்தில் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்களுடன் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் !
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் தேவிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து கடலோரப் பகுதிகளில் சுற்றுப்புறத்
தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.மனிதர்களின் வளமான வாழ்விற்கு இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக கடலும் கடல் சார்ந்த பகுதிகளை அவற்றின் வளமை பாதிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். அதன்படி கடல்வளத்தினை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக செப்டம்பர் 21-ம் நாளை ‘உலக தூய்மை தினமாக” கடைபிடித்து சுற்றுப்புற சுகாதார மேம்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது தேவிப்பட்டிணம் விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார்.

இப்பேரணியில் இராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த சார்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இப்பேரணியானது விவேகானந்தர் பள்ளி வளாகத்திலிருந்து துவங்கி தேவிப்பட்டிணம்
நவபாசாணம் நவகிரஹ திருக்கோயில் கடற்கரைப் பகுதியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற அனைவரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ மாணவிகளிடையே பேசுகையில்: பாரத பிரதமர் இந்திய அளவில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ‘தூய்மையே சேவை இயக்கம்” திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள்.

அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் மக்கள் நலனுக்காக சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டினை உறுதி செய்திடும் நோக்கில் 01.01.2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாகவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான உபயோகப் பொருட்களை பயன்படுத்திட ஊக்குவித்திடும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக நடத்தப்படும் இந்த கடற்கரை தூய்மைப்படுத்துதல் நிகழ்ச்சியானது பாராட்டுதற்குரியது. மாணவ மாணவியர்கள் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிவதோடு தங்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தாரிடத்திலும் எடுத்துரைத்திடவேண்டுமென பேசினார்.இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் திருமதி.தமிழ்செல்வி பாரத சாரண சாரணியர் இயக்க செயலர்கள் சிவ.செல்வராஜ் மண்டபம் கல்வி மாவட்ட செயலாளர் மகாலட்சுமி. துணை செயலளர் ஜெரோம். மாவட்ட சாரணிய ஆணையர் பரிமளா ஆண்டனி. ECO விஜயகுமார் , கருப்பையா, காந்தி, திருப்பாலைக்குடி PTA தலைவர் கோபு, உதவி தலைவர் தஸ்தகிர். கிருஷ்ணா மெட்ரிக் முதல்வர் முத்துகுமார். Infant Jesus முதல்வர் சகோ. ரைமெண்ட். தேவிபட்டினம் PTA தலைவர் கார்மேகம். மாநில பிரதிநிதிகள் காமாட்சி, செல்லம், செல்வகுமார்.மற்றும் தாளாளர்கள் முதல்வர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.






