தந்தை மகன் இடையே தகராறு! தடுக்க சென்றவர் குத்தி கொலை!
தந்தை மகன் இடையே நடந்த சண்டையை விலக்கச் சென்ற அவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதை காரணமா? தனது நண்பரின் மகன் வாசு கஞ்சா போதையில் தந்தையுடன் சண்டை போடுவதை தடுக்க சென்ற வினாயகம் இன்று உயிருடன் இல்லை. அவரது கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். சமாதானம் செய்ய சென்றவர் படுகொலையானது எப்படி?
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாநல்லூர் தர்கா பகுதியில் பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முத்து பாண்டி என்பவர் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தனது மனைவி மற்றும் மகனுடன் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வருகிறார்.
ஞாயிரு காலையில் முத்துப்பாண்டியின் நண்பன் வினாயகம் அவனை பார்க்க தோட்டத்திற்கு சென்றபோது அங்கு அவருடன் அவரது மகன் வாசு கஞ்சா போதையில் தகராறு செய்து கொண்டிருந்தான். தந்தை என்றும் பாராமல் அவரை அடித்துக் கொண்டிருந்த வாசுவை தடுக்க வினாயகம் சென்றார்.

அப்போது வாசு தனது கையில் இருந்த மூன்று அடி நீள வாளால் வினாயகத்தின் கழுத்தில் சரமாரியாக குத்தி, ரத்த வெள்ளத்தில் விழுந்த வினாயகம் அங்கேயே உயிரிழந்தார். போலீசார் விரைந்து சென்று வாசுவை கைது செய்தனர். வினாயகத்தின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவன் போதைக்கு அடிமையானவன் என்பதும் கஞ்சா விற்பனை, திருட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை என பல வழக்குகளில் சிறை சென்றவர் எனவும் தெரிய வந்துள்ளது.
வினாயகம் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்த உள்ளூர் மக்கள் தோட்டத்திற்குள் புகுந்து முத்துப்பாண்டி தங்கியிருந்த தகரக் கொட்டகையை அடித்து நொறுக்கினர். நண்பரும் அவரது மகனும் சண்டையிட்ட போது தடுக்க சென்ற அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






