--- --:--:-- --

ஏ.ஆர் ரகுமானிடம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..!

2

சை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறிய ஏ.ஆர் ரகுமானிடம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000 ஆண்டு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ஆனால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்த இழப்பு ஏற்பட்டதால் மூன்று கோடி ரூபாயை 6 மணி நேரத்தில் தர வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் நிறுவனங்களுக்கு விற்று ஏ ஆர் ரகுமான் நடந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரகுமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இழப்பு ஏற்பட்டிருவருக்கும், ரகுமானுக்கும் எந்த சம்பந்தமில்லை என கூறினார்.

 

மேலும் நிகழ்ச்சிக்காக பேசிய தொகையை கூட தரவில்லை என்று போலியாக கேட்கப்படும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறினார். பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏ ஆர் ரகுமானுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon