--- --:--:-- --

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு..!

5

ரண்டாம் உலகப் போருக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டின் கால்ஸ்டு எனும் போர் கப்பல் நார்வே நாட்டு நீர்மூழ்கி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் வேசர் பங் எனும் பெயரில் ஜெர்மன் நாடு 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நார்வே நாட்டின் மீது போர் தொடுத்தது.

 

ஜெர்மன் படையை எதிர்கொள்ள முடியாத நார்வே மன்னர் ஏழாம் பாக்கூர் பிரிட்டனுக்கு தப்பியோடினார்.1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேச நாடுகளிடம் ஜெர்மன் சரணடையும் வரை நார்வே மன்னர் பிரிட்டனில் தங்கி இருக்க நேரிட்டது.

 

நாஜிக்களின் நார்வே படையெடுப்பில் ஜெர்மன் கடற்படையை சேர்ந்த முக்கிய போர்க்கப்பலான கால்ஸ்டு கடற்படை கப்பல்கள் தாக்கி கடலில் மூழ்கடித்தன. கடலில் மூழ்கடிக்கப்பட்ட கால்ஸ்டு 174 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

 

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்த கால்ஸ்டு மணிக்கு 59 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. நார்வே கடல் பரப்பிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 490 மீட்டர் ஆழத்தில் தற்போது கால்ஸ்டுவை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள்.

 

கடலில் மூழ்கியுள்ள அந்தக் போர்க்கப்பலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாஜிகளின் அடையாளமான சுவாதிகா சின்னம் இந்த கப்பலில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon