சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார் எனக்கூறிய இயக்குனர் வசந்த்..!
சூரரைப்போற்று படத்தின் கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக நடிகர் சூர்யா வாழ்ந்திருக்கிறார் என இயக்குனர் வசந்த் கூறியுள்ளார். கடந்த வாரம் வெளியான சூரரைப்போற்று படத்தை பார்த்த இயக்குனர் வசந்த் கடிதம் மூலம் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை உயிரைக் கொடுத்து நடித்துள்ளதாகவும் சூரரைப்போற்று படம் தான் அவர்களை உச்சம் எனவும் கூறியுள்ளார். இயல்பாகவும் எதார்த்தமாகவும் சூர்யா நடித்துள்ளார் என வசந்த் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் என் விதை நீ: என் விருட்சம் நீ: உன் வெற்றியில் என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். நேருக்குநேர் திரைப்படம் மூலம் சூர்யாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்தி என்பது குறிப்பிடத்தக்கது.






