--- --:--:-- --

லாரியில் இருந்து கொட்டிய டீசல்..! அள்ளிச்சென்ற பொது மக்கள்..!

9

குஜராத் மாநிலம் வதோதரா அருகே இரு வாகனங்கள் மோதியதால் சாலையில் கொட்டிய டீசலை பொதுமக்கள் கேன்களில் அள்ளிச் சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை அணைத்து விட்டு திரும்பிய தீயணைப்பு வாகனம் ஒன்று எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் அதில் கொண்டு செல்லப்பட்ட டீசல் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. எளிதில் தீப்பற்றக் கூடியது என்ற ஆபத்தை உணராத மக்கள் தாங்கள் வைத்திருந்த கேன்கள் மற்றும் பாத்திரங்களில் டீசலை பிடித்து சென்றனர். தகவல் அறிந்த போலிசார் பொது மக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon