--- --:--:-- --

கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக் கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? செல்வப்பெருந்தகை பதிலடி

6

எம்.பி கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக்கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு மாறுவேடம் போட்டு, போய் பார்த்தது யார்? துணிச்சலாக சிங்கப் பெண்ணாக இருக்கிற கனிமொழி தன்னுடைய காரில்தான் சென்றார். மாற்றுக்காரில் செல்லவில்லை.

 

தமிழ்நாட்டு மக்களை பாஜகவிடம் அடகு வைப்பதற்காக, முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு சென்றார்கள். ஆனால் எங்கள் சந்திப்பு நேர்மையான – கண்ணியமான சந்திப்பு.

 

எங்களுடைய தோழமை கூட்டணிக்கு எந்தவித நெருக்கடியையும் நாங்கள் கொடுக்கவில்லை என திருவாரூரில் செல்வப்பெருந்தகை பேட்டி.

Right Menu Icon