ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரின் டிக்டாக் வீடியோ
ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பாஸ்ரீராணி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை புகழும்படி வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற போது அவரை புகழும் படியாக ராயலசீமா முத்து திட்டஜெகன் அண்ணா என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் பெண் துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீ ராணி அப்பாடலுக்கு நடித்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார்.






