--- --:--:-- --

தனுஷ் தந்தை நான் தான் என கூறியவர் மருத்துவமனையில் அனுமதி..!

13

துரை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் தான் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

 

இது பொய்யான வழக்கு, அவர்கள் கூறுவது உண்மையில்லை என கூறி நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்திருந்தார். இவர்களில் யார் கூறுவது உண்மை என தெரிந்துகொள்ள தனுஷ் மற்றும் கதிரேசனுக்கு மரபணுவை {டி.என்.ஏ} சோதனை செய்யப்பட்டது.இந்நிலையில், கதிரேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதனால் வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை {டி.என்.ஏ} சேகரித்து பாதுகாக்க வேண்டும் என கூறி கதிரேசன் தரப்பில் இருந்து மருத்துவமனை குழுவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon