வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வருகிற 29-ஆம் தேதி வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும், அதன் பிறகே அது புயலாக உருவெடுக்குமா என்பது தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிலும் தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கன மழையும் ஒரு சில பகுதியில் மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.






