வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் ஆர்ப்பாட்டம் ..!
ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள கமல் ஆலயத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கணேசனின் என்பவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.






