மருத்துவ இட ஒதுக்கீட்டை உயர்த்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5%லிருந்து 10%ஆக உயர்த்த ஆலோசனை நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
மேலும், மாணவியின் தாலியை கழற்றி தேர்வு எழுதும் வண்ணம் கொடுமையானதாக நீட் தேர்வு இருக்கிறது என கண்டனம் தெரிவித்த அவர், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் நீட் தேர்வில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சாடினார்.






