ம.நீ.ம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு..!
தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ம.நீ.ம பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ம.நீ.ம பொதுச்செயலாளர் அருணாச்சலம், தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சுவார்த்தைய நடத்தினோம். மக்கள் நீதி மய்யம் சார்பில் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வதாக தி.மு.க பேச்சுவார்த்தை குழு தெரிவித்தது. சட்டபை தேர்தலில் ம.நீ.ம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பது தெரியவரும் என்றார்.






