தனது தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய மகள்..!
பெருந்தொற்று ஊரடங்கிற்கு மத்தியில் கனடாவிலிருந்து வந்து தனது கல்லீரலை தானமாக வழங்கி தந்தையின் உயிரை காப்பாற்றிய மகளின் நிகழ்ச்சி செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நூல் பதிப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனிடைய அவருக்கு நோயின் தீவிரம் அதிகரித்த காரணத்தினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற சூழலில் கல்லீரலை தானமாக பெறப்பட்டு பொருத்துவது மிகுந்த சவாலாக இருந்தது.
இதற்கிடையே கனடா நாட்டின் கல்வி பயின்று வந்த அவரது 24 வயது மகள் தனது தந்தைக்கு கல்லீரலை தானமாக அளிக்க முன்வந்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 7 ஆயிரம் ரயில் பயணத்தில் சென்னை வந்து தனது தந்தைக்கு கல்லீரலை தானமாக அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தந்தையும் மகளும் நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.






