இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா..!
இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. இவர் முதன் முறையாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இயக்கும் படத்திற்கு லிங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





