--- --:--:-- --

தோல்வி பயத்தால் சிலிண்டர் விலை குறைப்பு : காங்கிரஸ் விமர்சனம்

3

மையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அதே நேரம் தேர்தல் தோல்வியால் பிரதமர் மேலும் பல பரிசுகளை அறிவிப்பார் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

 

இது தொடர்பாக தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார். விலை குறைப்பு குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் சந்தோஷத்தை அதிகரித்து வாழ்க்கை எளிதாக்கும் என தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதுவே கடவுளின் விருப்பம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனிடையே தேர்தல் தோல்வி பயத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

 

இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு சிலிண்டர் விலை ஏற்றமே முக்கிய காரணம் என்றும், மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் பாஜக தோல்வியை எதிர்நோக்கி உள்ளதாக கூறினார்.

 

மாநில தேர்தல் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோம் என்று பிரதமருக்கு பயம் வந்துவிட்டதாகவும் இதனால் வரும் நாட்களில் மேலும் பல பரிசுகளை அவர் அறிவிப்பார் எனவும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

 

Right Menu Icon