தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!
தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொது ஊரடங்கு நீட்டித்துள்ளார்.
அதிகளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வகையில் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.







