--- --:--:-- --

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய வகை மண்ணுளி பாம்பு

8

நாகை மாவட்டம் சீர்காழியில் சாலையின் குறுக்கே ஊர்ந்து வந்த அரியவகை மண்ணுளி பாம்பினை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டனர். கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் நள்ளிரவில் சாலையின் குறுக்கே மெதுவாக ஊர்ந்து சென்ற மண்ணுளிப்பாம்பை கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

 

அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 3.5 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பை பத்திரமாக மீட்டு கொள்ளிடம் ஆற்றுப் படுகை அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon