--- --:--:-- --

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

201906101407211750_Yuvraj-Singh-announces-retirement-from-all-forms-of_SECVPF

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. இந்திய அணிக்காக 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் யுவாராஜ் சிங் . 40 டெஸ்ட் மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் இந்தியாவிற்காக விளையாடியவர். 2011 உலக கோப்பை இந்தியா வெல்வதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றவர்.

 

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு பிறகு இந்திய அணிக்காக விளையாடியவர். 2007 இல் டி20 உலக கோப்பை போட்டியில் 6 பந்துகளில் 6  சிக்சர் விளாசியவர். 2017 இல் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடைசி சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் ஓய்வு அறிவிப்பு.

Leave a Reply

Right Menu Icon