தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி்: 60 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்து, 344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 80,672 பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 5,492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,971 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் 982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,625 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,871 ஆக அதிகரித்துள்ளது.







