“கூட்டணி என்பது துண்டு மாதிரி; கொள்கை என்பது வேட்டி மாதிரி..”அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “பஞ்ச்!”
கடல் பொங்கும் ஆனால் மங்காது அதுபோல அதிமுக பொங்கும் கடல் அதிமுக எந்தக் காலமும் அழியாது மீண்டும் அதிமுக கட்சி தான் வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எதைச்செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார் வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்பார். எதைச் செய்தாலும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது.
இரு மொழிக் கொள்கை தான் தமிழகத்தின் நிலைப்பாடு. கூட்டணி வேறு கொள்கை வேறு கூட்டணியை விட்டு கொடுக்கலாம் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. “கூட்டணி என்பது துண்டு மாதிரி. கொள்கை என்பது வேட்டி மாதிரி” எனத் தெரிவித்தார்.
மேலும் சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் நிகழுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எது நடந்தாலும், எப்படி நடந்தாலும், எந்த சூழ்நிலையில் நடந்தாலும், முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அதிமுக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை. தேர்தலை தைரியமாக சந்திப்போம் நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுவோம். வெற்றி பெறுவோம். அதிமுக கடல்போல் பெரிய ஆளுமையான கட்சி கடலில் கொந்தளிப்பு வரும் ஆனால் கடல் அப்படியேதான் இருக்கும். சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது அதுபோல அதிமுக பொங்கும் கடல் அதிமுக எந்தக் காலமும் அழியாது. மீண்டும் அதிமுக கட்சி தான் வரும் என தெரிவித்தார்.







