--- --:--:-- --

கொரொனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு

4

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி கோவிலுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், திருமலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

 

அதன் பின் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது கை கழுவுவதற்கு தேவையான கிருமிநாசினிகளையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

காய்ச்சல், இருமல், சளி பாதிப்புள்ளவர்கள் கோவிலுக்கு வராமல் இருப்பது நல்லது என்றும் முழு ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் மட்டுமே கோவிலுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

மலைப்பாதையில் பக்தர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பரிசோதனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon