தண்ணீரிலும் இருக்கும் கொரோனா வைரஸ்…கண்டுபிடிப்பு!
உலகையே ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரொனா வைரஸ் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொரொனா தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன் நதி மற்றும் எவர் கால்வாய் நீர் அந்த நகரில் உள்ள பூங்காக்கள் தோட்ட பணிகள் மற்றும் நகரில் உள்ள அலங்கார நீரூற்று கணக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த தண்ணீரில் 27 மாதிரிகள் பாரிஸ் நீர் ஆணையத்தின் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அதில் கொரொனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன் நதி மற்றும் எவர் கால்வாய் மூடப்பட்டது.
பிரான்சில் கொரொனா வைரஸ் பாதிப்பால் சுமார் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .







