--- --:--:-- --

4 நாளுக்கு பிறகு தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு : இன்றைய பாதிப்பு 3827 பேர் …61 பேர் உயிரிழப்பு

fgj

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக 4 ஆயிரத்திற்கும் மேலாக தினசரி கொரோணா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று குறைந்து 3827 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்று தொற்று பாதிப்புக்கு உள்ளானோருக்கு இணையாக 3793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நிலவரம் விர்ரென ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. 3000 , 3500 , 4000 என எகிறிய தொற்று பாதிப்பு, கடந்த 4 நாட்களாக 4 ஆயிரத்திற்கு மேலாகவே பதிவாகி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி வந்தது.இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கு கீழ் இறங்க 3827 பேர் என் பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 என உயர்ந்துள்ளது.

 

இன்றும் சென்னையில் பாதிப்பு அளவு குறைந்துள்ளது. 1747 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தான் இன்றும் பாதிப்பு அதிகமாகும். மதுரையில் இன்று 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இன்று தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 61 ஆக பதிவான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள 25 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று மாலை 2 கட்டங்களாக முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் கடந்த சில நாட்கள் க கொரோனா பாதிப்பில் உச்சத்தில் இருக்கும் மதுரையில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தி அதிகாரிகளுடனும் முக்கிய ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon