தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 5589 பேருக்கு தொற்று பாதிப்பு.. உயிரிழந்தோர் 70 பேர்!!
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 70 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5589 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 70 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்றும் ஒரேநாளில் பாதிப்பு ஆயிரத்தை 1,283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






