--- --:--:-- --

டார்லிங் பட நாயகி நிக்கிகல் ராணிக்கு கொரொனா பாசிடிவ்..!

4

டார்லிங் 2 திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நிக்கி கல்ராணிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் லேசான கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

 

தனது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அனைவரும் முகக்கவசம் அணியவும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல அமைச்சர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருந்தது. கொரொனாவால் அன்பழகன் உயிரிழந்தார்.

 

இதனை அடுத்து பல அமைச்சர்கள் கொரொனாவிலிருந்து மீண்டு உள்ளனர். இந்த நிலையில் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் குடும்பத்தாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை நிக்கிகல் ராணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon