--- --:--:-- --

கொரொனா தடுப்பூசியே போடாத நாட்டில் கொரொனா பரவல் குறைவா..?

4

ட கொரியா நாட்டில் முதல் கோவிட் தொற்று பதிவானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ளது. அந்நாட்டு அரசு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் எதற்காக உடனடியாக முழு ஊரடங்கு என்ற கேள்வி எழலாம்.

 

ஆனால் முதலில் இருந்தே கொரொனா தொற்றை கையாள்வதில் வட கொரிய அரசு வினோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. கொரொனா தொற்று அதிகரிக்கும் பொழுது தன்னை பிற நாடுகளிடம் இருந்து தனிமைப் படுத்திக் கொள்ளும் வட கொரியா கடந்த இரு வருடங்களாக ஒரே ஒரு கொரொனா தொற்று கூட பதிவாகவில்லை என வடகொரியா கூறிவந்தது.

 

மேலும் ஆறு மாத நிலவரப்படி 64 ஆயிரத்து 260 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அனைவருக்குமே நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மே மாதம் 8ஆம் தேதி உயிருக்கு உயிராக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

வடகொரியாவில் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2.6 கோடி மக்கள் தொகை கொண்ட வடகொரியாவில் ஒருவர் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon