கோவா முதலமைச்சருக்கு கொரொனா பாசிடிவ்..!
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கொரொனா அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் எனவே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் பிரமோத் சாவந்த் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரொனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் ஏற்கனவே கொரொனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ளனர்.







