--- --:--:-- --

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சகோதரருக்கு கொரோனா!!

14

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மதுரையில் தனியார் மருத்துவ மனையின் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு அரசியல் புள்ளிகளும் ஆளாகி வருகின்றனர். 4 திமுக எம்எல்ஏக்கள், ஒரு அதிமுக எம்எல்ஏ ஆகியோர் பாதிக்கப்பட்ட நிலையில், இதில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவான ஜெ.அன்பழகன் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. இதனால் அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர் என்றே கூறலாம்.

 

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரரும், தேனி மாவட்ட ஆவின் சேர்மனுமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon