அண்ணாமலை மற்றும் சுந்தர் சி இருவருக்கும் கொரொனா தொற்று..!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரொனா கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அண்மையில் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதைப்போல்பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவின் கணவரும் பிரபல திரைப்பட இயக்குனருமான சுந்தர்சி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பூ, சுந்தர் சிக்கு கொரொனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்திக் கொள்வதோடு பரிசோதனை செய்துகொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது உறவினர்கள் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனக்கு நான்கு நாட்களுக்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும், இருப்பினும் மீண்டும் தானும் தனது குடும்பத்தினரும் பரிசோதனை செய்து கொள்ள உள்ளதாகவும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.






