தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..486 பேர் உயிரிழப்பு..
தமிழகத்தில் தற்போது 3,10,157 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 2,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 பேரும், திருப்பூரில் 1696 பேரும், ஈரோட்டில் 1743 பேரும், சேலத்தில் 1492 பேரும், செங்கல்பட்டில் 1314 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 31,759 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 06 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.





