--- --:--:-- --

இத்தாலியில் 12ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு

9

இத்தாலியில் கொரொனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரொனா வைரசுக்கு இத்தாலியில் நேற்று மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளதாக பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில் நேற்று மட்டும் 4,503 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலிலிருந்து 15, 769 பேர் குணமடைந்த நிலையில் 1,988 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon