--- --:--:-- --

சென்னை அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரொனா பாதிப்பு..!

4

கொல்கத்தா அணியை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி செல்கிறது.

 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஆனால் கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி , சந்தீப் வாரியர் ஆகியோருக்கு பெருந்தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது .போட்டி நடக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Leave a Reply

Right Menu Icon