பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா உறுதி..!
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரொனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் அரசியல் திரையுலகம், விளையாட்டு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் 92 வயதான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயதை கருத்தில் கொண்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





