கடன் தராத கோபத்தில் வங்கிக்கு தீ வைத்தவர் கைது..!
கர்நாடகாவில் கடன் தராத கோபத்தில் ஒரு நபர் வங்கிக்கு தீ வைத்தார். அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் அங்குள்ள வங்கியில் பணம் கேட்டு அணுகியுள்ளார். அந்த நபர் அளித்த ஆவணங்கள் சரியாக இல்லாததால் கடன் தரமுடியாது என வங்கி மேலாளர் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த நபர் வங்கிக்கு தீ வைத்தார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





