பாடகராக மாறிய குக் வித் கோமாளி புகழ்..!
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக காமெடியில் கலக்கியவர் புகழ். அவர் அந்த ஷோவின் மூலமாக கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து தற்போது சினிமாவில் களமிறங்கி பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டர் zoo கீப்பர் என்ற படத்தில் அவர் ஹீரோவாகவும் புகழ் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நிஜ விலங்குகள் உடன் நடைபெற்றதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றது.
இந்நிலையில் புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் சிவாங்கி உடன் சேர்ந்து மேடையில் பாடல் பாடிக்கொண்டிருக்கிறார். பாடகரான புகழை அவரது ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்



